Connect with us

    “மாசத்துல 3 நாள் லாட்ஜ்ல என்கூட ஒரே ரூமில் தங்கணும்” – வேலை கேட்டு வந்த பெண்ணிடம் வில்லங்கமாக பேசிய கம்பெனி ஓனர்…!

    Ganesh babu

    Tamil News

    “மாசத்துல 3 நாள் லாட்ஜ்ல என்கூட ஒரே ரூமில் தங்கணும்” – வேலை கேட்டு வந்த பெண்ணிடம் வில்லங்கமாக பேசிய கம்பெனி ஓனர்…!

    வேலை கேட்டு இன்டர்வியூ வந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பெயிண்ட் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    Ganesh babu

    சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு.

    இவர் மாதவரம், 200 அடி சாலை, குமரன் மருத்துவமனை அருகில் கணேஷ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பெயிண்ட் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கணேஷ்பாபு இவரது நிறுவனத்திற்கு தனிப்பட்ட செயலாளர் (Personnel Secretary) வேலைக்கு ஆட்கள் வேண்டும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்.

    இந்த விளம்பரத்தை பார்த்த இளம்பெண் ஒருவர், கடந்த 22 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நேர் காணலுக்கு சென்றுள்ளார்.

    அவரிடம் கணேஷ்பாபு, இன்டர்வியூ நடத்தி போது, ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி  ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாதவரம் காவல்நிலைய போலீசார், கணேஷ்பாபுவை அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அந்த காமுகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

    நேர்காணலுக்கு வந்திருந்த பெண்ணிடம் எனது நிறுவனத்தில் தனிப்பட்ட செயலாளர் வேலைக்குச் சேர்ந்தால் மாதத்தில் மூன்று தடவை வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும் என்றும் அப்போது தன்னுடன் ஒரே அறையில் தங்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

    அதற்கு நீ ஒப்பு கொண்டால் உனது சம்பளம், வாழ்க்கை தரத்தை உயர்த்தி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் அந்த பெண் அணிந்து வந்த ஆடை, அலங்காரம் ரொம்ப மோசமாக இருப்பதாகவும் நல்ல உடையாக வாங்கிக் கொள் என்று அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் தெரிகிறது.

    ஆனால் அதை அந்த பெண் வாங்காமல் அங்கிருந்து வெளியில் வந்துள்ளார்.

    உடனடியாக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறி, மாதவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

    நடந்ததையெல்லாம் புகாராக எழுதி கொடுத்து, கணேஷ்பாபு மீது நடவடிக்கை எடுக்க கேட்டார்.

    போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கணேஷ்பாபுவை அதிரடியாக கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!