Connect with us

    சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்த மாநகர காவல் ஆணையர்; ஏன் தெரியுமா..???

    Auto annadurai met Chennai corporation police commissioner

    Viral News

    சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்த மாநகர காவல் ஆணையர்; ஏன் தெரியுமா..???

    Auto annadurai met Chennai corporation police commissioner

    அண்ணாதுரைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

    சென்னை ஈஞ்சம்பாக்கம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை. இவர், சென்னையில் கடந்த 12 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவரது குடும்பம் வறுமையால் வாடியதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தார்.

    சென்னை மாநகரத்திலேயே சிறந்த ஆட்டோவாக தனது ஆட்டோ இருக்க வேண்டும் என கருதினார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டார்

    வாடிக்கையாளர்களின் நலனுக்காக, தனது ஆட்டோவில் இலவச வை-பை வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட் என பல வசதிகளை வைத்திருக்கிறார்.

    அதுமட்டுமல்லாமல் ஆட்டோவுக்கு உள்ளேயே சிறிய குளர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றையும் வைத்துள்ளார்.

    மேலும், பணமாக செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார்.

    அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய நாளில் தள்ளுபடி விலையில் ஆட்டோ சவாரி செய்கிறார்.

    Auto annadurai in his auto

    தனது ஆட்டோவில் அண்ணாதுரை

    அதுமட்டுமல்ல, இவரது ஆட்டோவில் ஆசிரியர்கள் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம்.

    மழை வந்தால் பயணிகள் இறங்கும்போது, ​​நனையாமல் இருக்க குடை பிடிப்பார்.

    இத்தனை வசதிகள் இருந்தும், அண்ணாமலை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் பயணிகளிடம் வசூலிக்கிறார்கள்.

    இவரின் ஓட்டோவில் பயணிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அண்ணாதுரையின் ஆட்டோ சேவை பற்றி சமூக வலைதளம் மூலமாக அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அதில், “எம்பிஏ மாணவர்கள் இவருடன் ஒரு நாள் நேரத்தை செலவு செய்தால், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது குறித்து கற்றுக்கொள்ளலாம். இவர் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர்” என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

    அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், இவரின் வளர்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருகிறன்.

    அவரின் தொழில் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை பற்றி எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

    இந்நிலையில், முன்மாதிரி ஆட்டோ டிரைவராக அண்ணாதுரையை சென்னை மாநகர போலீசார் தேர்வு செய்திருந்தனர்.

    இதற்காக, அண்ணாதுரையை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!