Tamil News
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப்பில் கலக்கும் கடைக்காரர்; அதிர்ச்சி வீடியோ..!
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எச்சில் எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப்பில் கலக்கும் கடைக்காரர் ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசரமாக செல்வோர்கள், அதிக பணம் கொடுத்து பெரிய ஹோட்டல்களில் சாப்பிட முடியாதவர்கள் சாலைகளில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டு தங்களின் வயிற்றை நிரப்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்காகவே சென்னையில் ஆயிரக்கணக்கான தள்ளுவண்டி கடைகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் சென்னை, ஓ.எம்.ஆர். காரப்பாக்கம் பகுதியில் ஒருவர் நடைமேடை மீது சூப் கடை நடத்தி வருகிறார்.
இவர் அந்தப் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் சூப், சிக்கன் பகோடா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
அந்த கடையில் சூப் குடிக்க ஏராளமானவர்கள் தினமும் வருவது வழக்கம்.
அந்தக் கடையில் சூப் சாப்பிட்டுவிட்டு வாடிக்கையாளர்கள் எலும்புத் துண்டுகளை கீழே போட்டு விட்டுச் செல்வார்கள்.
பின்னர், சிறிது நேரம் கழித்து கீழே இருக்கும் எலும்பு துண்டுகளை ஆள் இல்லாத நேரம் பார்த்து, சூப் கடைக்காரர் கீழே இருந்து எடுத்துவிட்டு தண்ணீர் கழுவி மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார்.
இந்தக் காட்சிகள் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை கண்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
