Uncategorized
முக அழகை கூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்..!
உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கன்னட சீரியல் நடிகை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை நடிகை சேத்தனா ராஜ் (வயது 21) கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சேத்தனா புகழ்பெற்றார்.
உடல் எடைமற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
16-ம் தேதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு ‘கொழுப்பு அகற்றும் ’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மாலையில் அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால் சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து உடனடியாக சேத்தனா ராஜை அருகே இருந்த வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேத்தனா ராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சேத்தனா அறுவை சிகிச்சை குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் தனது நண்பர்களுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த் அவரது பெற்றோர்கள் தனது மகளின் மரணம் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது என புகார் தெரிவித்துள்ளனர்.
சேத்தனா ராஜின் உயிரிழப்பு கன்னட திரையுலகினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
