World News
36,000 அடி உயரத்தில் பிறந்த குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைத்த தாய்..!
விமான ம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி பெண் ஒருவர் விமான ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக விமான ஊழியர்கள் வெற்றிகரமாக அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர்.
அமெரிக்காவில் டென்வெரிலிருந்து ஓர்லாண்டோ செல்லும் ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமான த்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார்.
இந்த விமா ன ம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் திடீரென பிரசவ வலியால் துடித்தார்.
உடனே விமா ன த்தை பென்சகோலா விமான நிலையத்திற்கு திருப்ப விமான கேப்டன் முடிவெடுத்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் சமயோசிதமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண் டயானா ஜிரால்டோ, குழந்தை பெற்றெடுக்க அந்த கர்ப்பிணிக்கு உதவினார்.
இதன் காரணமாக, விமானம் தரையிறங்கும் முன்பே அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண்.
விமா ன ம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பூரண ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாக தெரிவித்தனர்.
புதிதாகப் பிறந்த பெ ண் குழந்தையின் தாய், பிறந்த இடத்தை குறிக்கும் வகையில், தனது குழந்தைக்கு “ஸ்கை” (வானம்) எனப் பெயரிட்டார்.
ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பேஸ்புக் பக்க த் தில் குழந்தையின் புகைப்படத்தையும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய விமான ஊழியர்கள் புகைப்படங் களையும் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
