World News
ஒரு வயதிலேயே ரூ.75,000 வரை சம்பளம் பெறும் அமெரிக்க குழந்தை! எப்படி தெரியுமா? வைரலாகும் வீடியோ..!
அமெரிக்காவில் பிறந்து ஒரு வருடமே ஆன குழந்தை ஒன்று சுமார் 75,000 வரை சம்பாதிப்பதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு வயது குழந்தை ப்ரிக்ஸ்.
இவரது தாய் மேற்கொள்ளும் பயண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து சம்பாதித்து வந்தார். அதுபோல இவர் செல்லும் இடங்களை பற்றி ஒரு புத்தகமாக எழுதியும் வந்துள்ளார்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருந்த போது எந்த இடத்திற்கும் இவரால் செல்ல முடியவில்லை. இதனால் இவரது இன்ஸ்டாவில் எந்தவித போஸ்ட் பதிவு செய்ய முடியவில்லை.
குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.
இதையடுத்து தனது குழந்தையின் பெயரில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
அந்த கணக்கில் அமெரிக்காவில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு ஏற்ற இடம் தொடர்பாக பதிவுகளை செய்து வந்துள்ளார்.
அவர் கணக்கு தொடங்கிய சில நாட்களுக்குள் 30 ஆயிரம் பேருக்கு மேல் இந்த கணக்கை பின் தொடர்ந்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி பிறந்த குழந்தை ஒரு ஆண்டிற்குள் 16 அமெரிக்க நகரங்களை சுற்றி பார்த்துள்ளது.
குழந்தையுடன் அவர்கள் பதிவு செய்யும் விடியோவிற்கு மாதம் சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 75ஆயிரம் ரூபாய் ஊதியமாக கிடைக்கிறது.
