Viral News
கோபத்தில் இருந்த ஆசிரியை; திடீரென முத்தம் கொடுத்து சமாதானம் செய்த குழந்தை; லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்ற செம க்யூட் வீடியோ..!
கோபத்தில் இருந்த ஆசிரியைக்கு திடீரென முத்தம் கொடுத்து சமாதானம் செய்த குழந்தையின் க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு ஆசிரியை ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது அந்த வீடியோ கிளிப் தொடங்குகிறது.
அந்த வீடியோவில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியை கோபத்துடன் அமர்ந்திருக்கிறார்.
வகுப்பறைக்குள் ஆசிரியையின் சொல் பேச்சை கேட்காமல் அந்த சிறுவன் இருந்துள்ளார்.
இதனால், ஆசிரியை உன்னிடம் இனி பேசமாட்டேன் என கூறி கோபமாக வகுப்பறைக்குள் இருந்துள்ளார்.
அவர் அருகே சென்ற அந்த குட்டி பையன் மன்னிப்பு கோரியதுடன் தான் இதுபோன்ற தவறை இனி மீண்டும் செய்யமாட்டேன் என கூறுகிறான்.
ஆனால் அந்த ஆசிரியை சமாதானம் ஆகவில்லை.
“இனிமேல் செய்யமாட்டேன் என்று ஒருமுறை சொன்னாய், ஆனால் மீண்டும் செய்தாய்” என்று குழந்தையின் மன்னிப்பை அந்த ஆசிரிறை ஏற்க மறுக்கிறார்.
சிறுவன் அந்த ஆசிரியைக் கட்டிப்பிடித்து, “நான் மீண்டும் சொல்ல மாட்டேன் மேடம்” என்று கூறுகிறான்.
குழந்தை இறுதியாக ஆசிரியரின் கன்னத்தில் ஒரு இனிமையான முத்தம் மூலம் இதயத்தை வென்றது.
பதிலுக்கு ஆசிரியை சிறுவனை முத்தமிட்டு கடைசி வாய்ப்பை வழங்குவதுடன் இந்த வீடியோ முடிகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்று வருகிறது.
ऐसा स्कूल मेरे बचपन में क्यों नहीं था 😏😌 pic.twitter.com/uHkAhq0tNN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 12, 2022
