Connect with us

    “என் குழந்தைய புதைக்க கூட இடம் தர மாட்றீங்க; அப்புறம் என்னய்யா கிறிஸ்டின் கிறிஸ்டினு பேசிட்டு இருக்கீங்க” – கண்ணீர் விட்டு கதறிய தாய்…!

    School student Dikshith

    Tamil News

    “என் குழந்தைய புதைக்க கூட இடம் தர மாட்றீங்க; அப்புறம் என்னய்யா கிறிஸ்டின் கிறிஸ்டினு பேசிட்டு இருக்கீங்க” – கண்ணீர் விட்டு கதறிய தாய்…!

    பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனை கல்லறையில் புதைக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    School student Dikshith

    சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் – ஜெனிஃபர் தம்பதியின் மகன் தீக்சித், வயது.7

    வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறான் தீக்சித்.

    இன்று காலையில் பள்ளி வேனில் பள்ளிக்குச் சென்ற தீக்சித், தனது பையை வேனிலேயே வைத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றுவிட்டான்.

    பின்னர், பையை எடுப்பதற்காக வேனை நோக்கி ஓடி வந்திருக்கிறான். அப்போது, பின் நோக்கி வந்த வேன், எதிர்பாராவிதமாக தீக்சித் மீது மோதிவிட்டது.

    இதில், சிறுவன் தீக்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து, சிறுவன் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ கல்லறையில் அனுமதி கேட்டிருக்கிறார்கள் சிறுவனின் பெற்றோர்.

    அதற்கு, கல்லறை நிர்வாகமோ பாதிரியார்களிடம் கடிதம் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்கள்.

    பாதிரியாரிடம் சென்று கேட்டதற்கு, நீங்கள் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள். நாங்கள் ஆர்.சி. கிறிஸ்தவர்கள்.

    ஆகவே, ஆர்.சி. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான கல்லறையில், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்று கூறி, நிராகரித்து விட்டதாக அவரது தாயார் ஜெனிஃபர் கண்ணீர் ததும்ப கூறிய காட்சி, காண்போர் நெஞ்சை கரையவைப்பதாக இருந்தது.

    மேலும், இதேபோல கடந்தாண்டு தனது தாயார் இறந்தபோது, சர்ச்சுக்குச் சென்று பாதிரியார்களிடம் தனது வீட்டில் வந்து பிரேயர் செய்யும்படி கேட்டிருக்கிறார்.

    அதற்கு சர்ச் நிர்வாகம் இதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜெனிஃபர் என்னய்யா மதம் இதெல்லாம். கிறிஸ்தவத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!