Tamil News
“சிக்கன் பிரியாணியா, இல்லை கரப்பான் பூச்சி பிரியாணியா” – சென்னையை அலற வைத்த பிரபல பிரியாணி கடை…!!
சென்னையில் பிரபலமான புகாரி உணவகத்தில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ளது புஹாரி ஹோட்டல். இதன் கிளைகள் சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் உள்ள உணவகத்திற்க்கு உணவருந்த வந்த தம்பதி வந்திருந்தனர்.
அப்போது மெனு கார்டை பார்த்து பிரியாணியை ஆர்டர் செய்தனர்.
சுடச்சுட வரும் பிரியாணியை சாப்பிட ஆசையாக காத்திருந்தனர்.
அப்போது பிரியாணி சாப்பிட்டு முடிக்க போகிற நேரத்தில் ஒரு கைப்பிடி அளவே இருந்த பிரியாணி ஏதோ கருப்பாக இருந்ததை தம்பதி கண்டனர்.
அது மசாலாவாக இருக்கும் என நினைத்த நிலையில் அது கரப்பான் பூச்சி.
இதுகுறித்து உணவக மேலாளரிடம் கேட்டதற்கு, அவர் பேசி சமாதானம் செய்ய முற்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி சுகுமார் உணவகத்தில் சோதனை மேற்கொண்டார்.
இந்த சோதனையில், உணவக சமயலறையில் விதிமுறைகள் பின்பற்றாமல், அசுத்தமான நிலையிலேயே உணவு சமைக்கப்பட்டுவந்ததும், குறிப்பாக அங்கே கரப்பான் பூச்சிகள் சுற்றித்திரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சமையலறை பகுதியில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்ததை கண்டார்.
பின்னர் புகாரின் அடிப்படையில் 3 நாள் உணவகத்தை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உணவகத்திற்கு மூட உத்தரவிட்டார்.
ஹோட்டல் மீது எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு 5000 ரூபாய் அபாரதத்தை விதித்தார்.
