Tamil News
படிக்க கஷ்டமாக இருக்கிறது; ஹாஸ்டல் அறையில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்..!!
திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர், ஏரல் வட்டம் சக்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் செல்வராணி(19).
இவர் திருச்செந்தூரில் தனியார் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், செல்வராணி தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு மாணவி சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில், செல்வராணி, தனது தோழியின் அறைக்கு சென்று தூங்கி உள்ளார்.
நேற்று காலை 7 மணிக்குஎழுந்து, அவரது அறைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், காலை உணவு சாப்பிட பிற மாணவிகள் செல்வராணியை அழைப்பதற்காக அவரது அறைக்குச் சென்று, கதவைத் தட்டியுள்ளனர்.
அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறைக்குள் செல்வராணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். தகவலறிந்து திருச்செந்தூர் ஆர்டிஒ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஏ.டி.எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், லயோலோ இக்னிஷீயஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், மாணவியின் அறையில் இருந்து மாணவி எழுதி வைத்திருந்த துண்டு சீட்டு கைப்பற்றப்பட்டது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை.
எனக்கு படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மாணவி செல்வராணி எழுதி வைத்துள்ளார்.
மாணவியின் தற்கொலை குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
