Tamil News
“அவர் தான் காரணம்; அவரால தான் நான் போறேன்” -கல்லூரி பேராசியரால் உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவி; நெஞ்சை உருக்கும் சோகம்..!!
தென்காசி மாவட்டம்
புளியங்குடி அருகே மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டு பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா(வயது 18).
இவர் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை மாடத்தி மகளை கல்லூரிக்கு செல்வதற்காக எழுப்பி விட அவரது அறைக்குள் சென்றுள்ளார்.
அங்கு இந்துபிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை கண்ட தாய் மாடத்தி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இந்துபிரியா உடலை கீழே இறக்கினர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை
புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி வீட்டில் நடத்திய சோதனையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் மாணவி எழுதியிருப்பதாவது: ‘‘நான் தற்கொலை செய்வதற்கு பி.காம் துறையில் பணியாற்றும் ஒரு பேராசிரியரும், பேராசிரியையும் தான் காரணம்.
நான் கல்லூரிக்கு செல்போன் கொண்டு போகவில்லை. ஆனால் நான் கொண்டு வந்ததாகக் கூறி மன்னிப்பு கடிதம் எழுதக் கூறினர்.
அனைவரின் முன்னிலையில் இருவரும் என்னை ‘மேனர்ஸ் இல்லாத பெண்’ என்று திட்டினர்.
அந்தப் பேராசிரியர் சில பெண்களுக்கு தப்பான மெசேஜ் அனுப்பியுள்ளார். தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன்.
அந்த பேராசிரியர் கல்லூரியை விட்டு போகணும். நான் செத்து போறதுக்கு சார் தான் காரணம்.
இது எல்லாருக்கும் தெரியனும். அந்த பேராசிரியர் கல்லூரியை விட்டு போகணும். நான் தான் இந்த லட்டரை எழுதினேன். ப்ளீஸ் நீதி கிடைக்கணும்.
இப்படிக்கு, உங்களின் அன்பானவள், இந்து பிரியா என்று எழுதியுள்ளார்.
பேராசிரியர் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
