Tamil News
நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் தண்ணியடித்து உல்லாசமாக இருந்த காதலி; ஆத்திரத்தில் காதலியின் மண்டையை உடைத்த காதலன்..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ். இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார்.
இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (19), கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும் அப்பகுதியை சேர்ந்த அஜின் என்பவரும் கடந்த 6 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
ஜாபியா ஜாஸ்மினுக்கு அட்வெஞ்சரான பயணங்கள் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது.
அது மட்டுமின்றி க..ஞ்.சா, மது போ.தை பழக்கமும் இருந்துள்ளது.
காதலர்கள் இருவரும் பைக்கில் வெகுதூர பயணம் செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார்.
மேலும், இரவில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, க.ஞ்.சா என இரவு முழுவதும் லூட்டி அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து காதலன் அஜின் கேட்டபோது, ” வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழணும்டா, என்னை இனி நம்பாதே.
நீயும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணு” என்று கூறி அவரை உதறி தள்ளியுள்ளார்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு அந்த பெண் தன் ஆண் நண்பர்களான ஆகாஷ், மணிகண்டனை வரவழைத்து இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த பார்ட்டிக்கு தன் 2 தோழிகளையும் வரவழைத்துள்ளார். அதில் ஒரு மாணவிக்கு ஆண்களும் வருவார்கள் என்று தெரியவில்லை.
மது குடிக்கும் ஆசை ஏற்பட்டதால் அந்த பார்ட்டிக்கு அந்த மாணவி ஒப்புக்கொண்டு இரவு 7 மணிக்கு சென்றுள்ளார்.
அங்கு மது மட்டுமல்லாமல் க..ஞ்.சா.வையும் அந்த மாணவியை வற்புறுத்தி புகைக்க வைத்துள்ளனர்.
இதனை அறிந்து அங்கு சென்ற அஜின் தனது காதலியும் அவரது தோழிகளும் ஆண் நண்பர்களுடன் மது போ.தையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார்.
அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சென்று நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு காதலியை தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தலையில் காயமடைந்த ஜாஸ்மின் நேற்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் அஜின் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார் தாக்குதல் நடத்தி தப்பியோடிய அஜினை தேடி வந்தனர்
மேலும், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.
அஜின் தாயார் ஜாஸ்மினால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
