Tamil News
நடுரோட்டில் அடித்துக் கொண்ட கல்லூரி மாணவிகள்; வைரல் வீடியோவால் பரபரப்பு..!!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல்
கல்லூரி முடித்துவிட்டு புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துகொண்டிருந்த போது மாணவிகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் திடீரென இரு மாணவிகளுக்கும் இடையே குடுமி பிடி சண்டையாக மாறியது.
இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது இவர்களின் தோழிகளும் அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் அங்கிருந்த சக கல்லூரி மாணவ மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை, 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார்
