Connect with us

    பஸ் ஸ்டாப்பில் தாங்கள் அமரும் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் மடியில் ஒருவர் அமரும் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ மாணவிகள்..!

    Students protest

    Viral News

    பஸ் ஸ்டாப்பில் தாங்கள் அமரும் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் மடியில் ஒருவர் அமரும் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ மாணவிகள்..!

    கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றின் அருகே இருந்த பயணிகள் நிழற்குடையின் இருக்கைகளை சேதப்படுத்தியதை கண்டித்து மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் உட்காரும் போராட்டம் நடத்தினர்.

    Students protest

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ளது CET பொறியியல் கல்லூரி.

    இந்த கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது.

    இதில் பயணிகள் அமர வசதியாக இருக்கை போடப்பட்டு இருந்தது.

    இதில் அந்த கல்லூரியை மாணவ மாணவிகள் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம்.

    நாள் முழுக்க கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் இங்கு அமர்ந்து அரட்டை அடிப்பதை தடுக்கும் வகையில் கடந்த 18-ம் தேதி மர்மநபர்கள் சிலர் அங்குள்ள இருக்கையை சேதப்படுத்தி உள்ளனர்.

    மறுநாள் காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் நிழற்குடை இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவர்கள் தகவல் கொடுத்தனர்.

    மேலும், இந்த செயலை கண்டிக்கும் விதமாக மாணவ-மாணவிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதாவது, சேதமடைந்த இருக்கையில் மாணவ மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து இருந்தபடி தங்களது எதிர்ப்பை புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்

    இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    இந்த நிலையில் இச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!