Uncategorized
வயதான பெண்களுக்கு வளைக்காப்பு நடத்தி அரசின் நிதியை ஆட்டைய போட்ட அதிகாரிகள்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சில தினங்களுக்கு முன் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்தபடி போதிய கர்ப்பிணி பெண்கள் வராததால் உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றி வரும் 5 பெண்களை கர்ப்பிணி போல செட்டப் செய்து கூட்டத்தில் அமர வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த 5 பேரும் தற்போது கர்ப்பமாக இல்லை என்ற போதும் இந்த நாடகத்தை சம்பந்த ப்பட்ட துறையின் ஊழியர்கள் அரங்கேற்றி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வட்டாரத்திற்கு அரசு சார்பில் உணவு வகைக்காவும், வளையல்கள், மாலைகளுக்காகவும் 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
கர்ப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கூடுதல் நிதி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு இந்த வில்லங்கமான வேலையை செய்துள்ளனர் அரசு அதிகாரிகள்.
மேலும், வளைகாப்பு என்ற பெயரில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டால் முழு உண்மையும் வெளிவரும் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
