Connect with us

    ஒரே நேரத்தில் 3 பெண்களை மணந்த இளைஞர்; எப்படித் தான் சமாளிக்க போறாரோ??

    Congo youth marries triplets

    World News

    ஒரே நேரத்தில் 3 பெண்களை மணந்த இளைஞர்; எப்படித் தான் சமாளிக்க போறாரோ??

    காங்கோ நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்களைஇளைஞர் ஒருவர் ஒரே மேடையில் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Congo youth marries triplets

    காங்கோ நாட்டில் ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம், அதேபோன்று பெண்களும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஒரு சிலர் இந்த அறிவிப்புக்கு ஆதரவு அளித்து வந்தாலும், பலரும் இதனை எதிர்த்து வருகின்றனர்.

    இந்ரிலையில், காங்கோ நாட்டைச் சேர்ந்த லுவிசோ என்ற இளைஞர்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்டாலி என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

    அந்த பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார். அப்பொழுது நட்டாலி லுவிசோவை அவரது சகோதரிகள் நடாகே மற்றும் நாடாஷா ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அப்பொழுது தான் நட்டாலி, நடாகே மற்றும் நாடாஷா ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்பது லுவிசோவிற்கு தெரிய வந்தது.

    நடாலியின் சகோதரிகள் இரண்டு பேரும் லுவிசோ வை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளனர்.

    இதனையறிந்த அவர்களது சகோதரி நடாலி; தனது சகோதரிகள் இருவரின் காதல் குறித்து காதலனுடன் பேசி, மூன்று பேரையும் திருமணம் செய்துக் கொள்ளுமாறு பணித்துள்ளார்.

    இதனைக்கேட்டு தான் காண்பது கனவா இல்லை நினைவா என திகைத்து நின்றுள்ளார்.

    மூன்று பேரின் கருத்து குறித்து பெற்றோரிடம் இளைஞர் கூறியுள்ளார்.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மூன்று பேரையும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்களது பேச்சினை கேட்காமல் நண்பர்கள் முன்னிலையில் மூன்று பெண்களையும் தங்களது முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

    இது குறித்து பேசிய லுவிசோ மற்றவர்கள் என்ன நினைத்தாலும் தனக்கு கவலை இல்லை.

    சகோதரிகள் மூன்று பேரையும் திருமணம் செய்தது மகிழ்ச்சி தான் என்றும் காதலுக்கு எல்லை இல்லை என்றுதான் தன்னால் சொல்ல முடியும் எனவும் கூறினார்.

    இந்த வீடியோ மற்றும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!