Tamil News
பைக்குடன் சேர்த்து சிமெண்ட் ரோடு போட்ட காண்டிராக்டரின் உரிமம் ரத்து; வேலூர் மேயர் நடவடிக்கை..!
வேலுாரில், பைக்குடன் சிமென்ட் சாலை போட்ட கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மேயர் சுஜாதா உத்தரவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வேலுாரில் நடந்த பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார்.
முதல்வரின் வருகையையொட்டி முன்னறிவிப்பு இல்லாமல், வேலுாரின் பல இடங்களில் சாலை போட்டுள்ளனர்.
அதில், மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோவில் தெருவில், சிவா என்பவர் கடை முன் நிறுத்தியிருந்த பைக்குடன் சேர்ந்து சிமென்ட் சாலை போடப்பட்டது.
இதனால் காலையில் தனது பைக்கை அவரால் எடுக்க முடியவில்லை.
சிமெண்டை உடைத்து பைக்க எடுக்க கடுமையாக போராடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு காரணமான காண்டிராக்டர் குமார் என்பவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
