Connect with us

    இரவோடு இரவாக வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரையும் சேர்த்து சிமெண்ட் ரோடு போட்ட காண்டிராக்டர்..!

    Two wheeler cement road

    Tamil News

    இரவோடு இரவாக வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரையும் சேர்த்து சிமெண்ட் ரோடு போட்ட காண்டிராக்டர்..!

    வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக சாலைபோடும் போது சாலையில் நின்ற இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து சிமெண்ட் ரோடை போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Two wheeler cement road

    வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் வேலூர் பேரி காளியம்மன் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட பேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா.

    இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

    காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

    அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

    தனது வாகனத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இறுகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை.

    பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.

    எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர்.

    அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.

    தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது.

    இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!