Cinema
“வெந்து தணிந்தது காடு வெளியாகும் செப்.15-ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்” – கூல் சுரேஷ் வேண்டுகோள்..!
நடிகர் சந்தானத்துடன் பல படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ்.
இவர் பல்வேறு தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சமீபகாலமாக, எந்த நடிகர்களின் படங்கள் வெளியானாலும் முதல் நாளே திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படத்தை பார்த்துவிட்டு தனது பாணியில் சில தகாத வார்த்தைகளால் பேசி ரசிங்கர்களை உற்சாகம் படுத்தும் விதமாக பாராட்டி விடுவார்.
இவ்வாறு இவர் பேசும்போது இதற்காக சில சர்ச்சைகளும் எழுந்ததுண்டு.
அப்படித்தான் சமீபத்தில் வெளியான விருமன் படத்தை பார்த்து விட்டு தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அதிதி என் காதலி என கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனால் ரசிகர்களிடையே மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானார்.
இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மறுநாளே நான் உணர்ச்சி வசப்பட்டு பேசியது தவறுதான். அதிதி தங்கச்சி அண்ணன் என்ன மன்னிச்சிடுமா.
சங்கர் சார் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்லிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.
மைக் நீட்டும் போது உணர்ச்சிவசப்பட்டு நடிகைகளை அழகை வர்ணிக்கிறேன் என்ற பெயரில் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு தற்போது மன்னிப்பு கேட்கும் இந்த கூல் சுரேஷை இணையவாசிகள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இவர் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்…
“செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகிறது.
அன்றைய தினம் தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் சார்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்துக்களைச் சொல்லி வந்தாலும் மற்ற நெட்டிசன்கள் இவரை திட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
