Connect with us

    மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கூலித் தொழிலாளியின் மகள்; குவியும் பாராட்டுக்கள்..!

    Raksaya

    Tamil News

    மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கூலித் தொழிலாளியின் மகள்; குவியும் பாராட்டுக்கள்..!

    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர், Forever Star India Awards நடத்திய அழகிப்போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

    Raksaya

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரது மகள் ரக்சயா(20).

    இவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

    தன்னுடைய சிறு வயது முதல் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்து வந்துள்ளார்.

    ஆனாலும் தனது குடும்ப வறுமையை கருதி பகுதி நேர வேலை செய்து தன்னை அழகிப் போட்டிக்கு தயார்படுத்தி வந்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்ட ரக்சயா, அதில் வெற்றி பெற்றதால் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டார்.

    அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார்.

    அதன் பின்னர் மாநில அளவிலான போட்டி ஜெய்ப்பூரில் செப்.18ம் தேதி முதல் 21ம் வரை நடந்தது.

    இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்து கொண்டதில் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

    அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதில் தேர்வாகும் நபர், ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார். இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்சயா

    தங்களது மகளின் வெற்றி குறித்து ரக்சயாவின் பெற்றோர்கள் கூறுகையில்,

    சிறு வயது முதலே ரக்சயா விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்து வந்தார்.

    இதனை நாங்கள் தடுக்கவில்லை. நாங்களும் அவரை ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, ஆங்கர் வேலை உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

    நாங்கள் வறுமையில் இருந்த பொழுது எங்களின் நலம் விரும்பிகள் சிலர் என் மகளின் படிப்பு செலவை ஏற்று, கொண்ட காரணத்தினால், அவள் மேல் படிப்பை தொடர முடிந்தது.

    தற்பொழுது மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

    இதனையடுத்து நடைபெற உள்ள மிஸ் இந்தியா போட்டியிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!