Connect with us

    பூஜை செய்ய சென்ற வீட்டில், அந்த வீட்டு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததால் ரூ.49 லட்சம் பறிகொடுத்த பூசாரி…!!

    Raju, bhavya honey trap

    Viral News

    பூஜை செய்ய சென்ற வீட்டில், அந்த வீட்டு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததால் ரூ.49 லட்சம் பறிகொடுத்த பூசாரி…!!

    பூஜைக்கு வந்த பூசாரியுடன் உல்லாசம் அனுபவித்து கொண்டு அதனை வீடியோ எடுத்து அவரிடம் மிரட்டி பணம் பறித்த ஒரு பெண் மற்றும் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பவ்யா வயது.30

    தன் கணவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை  பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இதையடுத்து அரகலகுடு என்ற பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பவ்யா அவருடன் வாழ்ந்து வந்தார்.

    Raju, bhavya honey trap

    Accused Bhavya, Raju

    இந்நிலையில், இவர்கள் தங்களது வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறி அதை தீர்க்க சிக்மக்ளூருவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவரை சந்தித்துள்ளனர்.

    அவர் ஜோதிடராகவும் பணி செய்து வருவதால் அவரை பரிகார பூஜை செய்ய வீட்டிற்கு அழைத்தனர்.

    அப்போது அந்த பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.

    பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

    இதை அவரது கணவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

    இந்நிலையில், பூஜை எல்லாம் முடிந்து அர்ச்சகர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    அப்போது ராஜூ அந்த அர்ச்சகருக்கு போன் செய்து தனக்கு பணம் கொடுக்குமாறும் இல்லாவிட்டால் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சமூகவலைதளங்களில் போட்டுவிடுவேன் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவ்வப்போது பணம் தந்துள்ளார்.

    ரூ.15 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.34 லட்சத்தை பல வங்கி கணக்குகளிலும் செலுத்தியுள்ளார்.

    இதனை வைத்து ராஜூவும், பவ்யாவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

    பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அர்ச்சகரை போன் செய்த குமார், மீண்டும் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இதுவரை ரூ.49 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், நிம்மதி இழந்த பூசாரி காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார்.

    இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!