Tamil News
வாடிக்கையாளர் போல நடித்து கணவன் மனைவி செய்த கேவலமான செயல்; அதிர்ச்சியில் போலீசார்..!!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா.
கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் என மூன்று பொருட்களை ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் ஆர்டர் செய்து இருந்தார்
அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரியும் நவீன் என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த லேப்டாப், ஆப்பிள் வாட்ச் உட்பட மூன்று பொருட்களை பார்சலுடன் வேலம்பாளையம் பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது கார்த்திக் மனைவி ராதிகா வீட்டிற்கு வெளியே வந்து நவீன் கொண்டு வந்த மூன்று பொருட்களை பெற்றுக்கொண்டு தனது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டு டெலிவரி பாய் நவீனிடம் சுமார் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் கார்த்திக் மூன்று பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு ஆன்லைன் பேமெண்ட் செய்ய முடியவில்லை என்று கூறி அதற்கான தொகை ரூ.546 மட்டும் கொடுத்து விட்டு நாளை பேமென்ட் செய்து மற்ற இரண்டு பொருட்களை பெற்றுக் கொள்வதாக கூறினார்.
அதற்கு நவீன் பார்சல் எடை அதிகமாக இருக்கிறது என்று கேட்டதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு கார்த்திக் தனது மனைவியுடன் வீட்டுக்குள் சென்று விட்டார்.
பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் உயரதிகாரியிடம் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பார்சலை திறந்து பார்த்தனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண மலிவான வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப் பட்டிருந்தது.
நூதன முறையில் கணவன்- மனைவி ஏமாற்றியதை உணர்ந்த அவர்கள் இதுகுறித்து மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் மலையம்பாளையம் போலீசார் இதுகுறித்து கார்த்திக் மற்றும் ராதிகா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸார் கூறும்போது, கார்த்திக் சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் வேலைபார்த்த ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கார்த்திக், ராதிகா இதேபோன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மீது கோவை மதுரை சென்னை போன்ற இடங்களிலும் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு மோசடி வழக்கில் ராதிகாவை சென்னை போலீசார் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்துள்ள னர்.
கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
