Connect with us

    காதல் திருமணம் முடிந்து காரில் ஜாலியாக வந்த காதல் ஜோடியின்; காரை மடக்கி கடத்திச் சென்ற குடும்பத்தினர்; சினிமா பாணியில் நடந்த விபரீதம்!!

    காதல் திருமணம் செய்த தாமரைக்கண்ணன்

    Tamil News

    காதல் திருமணம் முடிந்து காரில் ஜாலியாக வந்த காதல் ஜோடியின்; காரை மடக்கி கடத்திச் சென்ற குடும்பத்தினர்; சினிமா பாணியில் நடந்த விபரீதம்!!

    கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியினரை பெண்ணின் வீட்டார் கார் வைத்து கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காதல் திருமணம் செய்த தாமரைக்கண்ணன்

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்.

    இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அருள்முருகன் என்பவரின் மகளும் சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையல், இருவரும் கடந்த 27ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டு சென்னை சென்றுள்ளனர்.

    அதன் பின்னர், காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து வடலூர் காவல் நிலைய காவல் துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    எனினும், அந்த தம்பதியினர் சென்னைக்கு சென்று பாஜக தலைவர் ஒருவரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தம்பதியினர் கடந்த 31 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கடலூர் நோக்கி வந்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்த தம்பதியினரை மரக்காணம் அருகே அருள்முருகன் காரை மடக்கி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கடத்தி சென்ற தம்பதியினரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!