Uncategorized
காதலருக்கு தெரியாமல் ஆணுறையில் துளை போட்டு காதலனுடன் உடலுறவு; இளம்பெண்ணுக்கு கோர்ட் அளித்த தண்டனை…!
ஜெர்மனியில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு பெண் தன்னுடன் உடலுறவு கொண்ட தனது துணைவரின் ஆணுறையில் வேண்டுமென்றே துளை ஏற்படுத்தியதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் 42 வயது ஆணுடன் 39 வயதான பெண் ஒருவர் “லிவிங் டூ கெதர்” முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து, நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்கள் பழக்கம் பாலியல் உறவை கடந்து நெருக்கமாக இருந்துள்ளனர்.
அந்த பெண், தனது நண்பர் மீது அளவுக்கு அதிகமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் அந்த நபரிடம் தெரிவிக்கவே, தனக்கு இது மாதிரியான நிரந்தர உறவில் இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் ஒரு இரவில் உறவு கொள்ளும்போது அந்த வைத்திருந்த ஆணுறை பாக்கெட்களில் ரகசியமாக துளையிட்டார்.
இதன் மூலம் தான் கர்ப்பம் தரித்து, தன்னுடன் அவர் கடைசி வரை இருப்பார் என்று நம்பியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இப்படியாக நாட்கள் நகரவே, அந்த நபருக்கு அந்த பெண் வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கர்ப்பமாக இருப்பதாக உணர்வதாகவும். மேலும் தான் வேண்டுமென்றே ஆணுறைகளை துளையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அந்த பெண்ணின் மீது குற்றவியல் ரீதியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வினோத வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது,
“வழக்கத்திற்கு மாறான இந்த வழக்கு ஜெர்மனியின் சட்ட வரலாற்று புத்தகங்களில் ஒன்றாகும்.
இது குற்றவியல் திருட்டுத்தனத்தின் நிகழ்வைக் குறிக்கிறது. ஆனால் இந்த முறை, இது ஒரு பெண்ணால் நடத்தப்பட்டது” என்று கூறினார்.
கோர்ட்டில் அந்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
