Connect with us

    கொலைக் குற்றவாளியை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் லாட்ஜில் காதலியுடன் உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்த போலீசார்..!!

    Criminal

    Viral News

    கொலைக் குற்றவாளியை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் லாட்ஜில் காதலியுடன் உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்த போலீசார்..!!

    Criminal

    கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சா கான் (வயது 55).

    இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதன் காரணமாக தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

    இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக பெல்லாரி சிறையில் இருந்து தார்வாட் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டான்.

    பாதுகாப்புக்காக அவருடன் 5 போலீசார் சென்றிருந்தனர்.

    வழக்கு விசாரணை முடிந்த பின் மீண்டும் பெல்லாரி சிறைக்கு வரவில்லை.

    மாறாக தார்வாட் மாவட்டம் சாட்டூர் நகரிலுள்ள பிரக்ரிதி லாட்ஜ்க்கு சென்றுள்ளான்.

    அந்த லாட்ஜில் பச்சா கான் தனது காதலியை சந்தித்துள்ளார்.

    பின்னர், பச்சா கானையும் அவரது காதலியையும் போலீசார் ஓட்டல் அறைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

    பச்சா கானும் அவரது காதலியும் ஓட்டல் அறையில் தனிமையில் இருந்துள்ளனர்.

    அந்த அறைக்கு வெளியே 5 போலீசாரும் காவலுக்கு நின்றுள்ளனர்.

    பச்சா கான் தார்வாட் சிறைக்கு கொண்டு செல்லாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்துள்ளதாக கோகுல் ரோடு பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலையடுத்து, அந்த ஓட்டலில் கோகுல் ரோடு பகுதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கிச் சோதனையில் குற்றவாளி பச்சாகான் தனது காதலியுடன் ஓட்டல் அறையில் இருந்ததையும், குற்றவாளியின் காவலுக்கு அந்த அறைக்கு வெளியே 3 போலீசார் காவலுக்கு நின்றதையும் கண்டு கோகுல் நகர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து, கொலை குற்றவாளி பச்ஷாகான், அவரது காதலி மற்றும் காவலுக்கு நின்ற போலீசாரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!