Connect with us

    பணத்திற்காக கணவன், மனைவி இருவரும் கூட்டாக செய்த கேவலமான செயல்; அதிர்ச்சியில் போலீசார்..!!

    Criminal couple were arrested

    Tamil News

    பணத்திற்காக கணவன், மனைவி இருவரும் கூட்டாக செய்த கேவலமான செயல்; அதிர்ச்சியில் போலீசார்..!!

    கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Criminal couple were arrested

    கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த சம்பம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    விசாரணையில் 8-ம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸியில் பயணித்தது தெரிய வர அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவம் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் இருவரையும் சென்னையில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

    அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, ரூ.6,100 ரொக்கம், லேப்டாப் மற்றும் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்கள் கொள்ளை அடிக்கும் பொழுது விஷ ஊசி செலுத்தி கொலை செய்து கொள்ளை அடிப்பது வருவது வழக்கமாக இருந்துள்ளது.

    துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!