Cinema
“உங்களுக்காக 12 வருடங்கள் என் நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம்” – டி.இமானின் முன்னாள் மனைவி ஆவேசம்…!
இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்ததற்கு, அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார்.
விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார்.
இவரது மனைவி மோனிகா அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.
நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர்.
இவர்களுக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் இமான்.
அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான், தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இமானின் 2வது திருமணம் குறித்து அவரது முதல் மனைவி பதிவிட்ட பதிவு செம வைரல் ஆகி வருகிறது. அதில், “டியர் இமான், உங்கள் 2ம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம்.
அதற்காக வருத்தப்படுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை.
தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன்.
தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் பாதுகாப்பேன். Happy married life.”
என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
