Connect with us

    43 வருடங்களாக தந்தையின் கல்லறைக்கு சென்று வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி; என்ன தெரியுமா..??

    World News

    43 வருடங்களாக தந்தையின் கல்லறைக்கு சென்று வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி; என்ன தெரியுமா..??

    கடந்த 43 வருடங்களாக, தனது தந்தையின் கல்லறைக்கு அவரது மகள் ஒருவர் சென்று வரும் செய்தி இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Graveyard

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Sylvia Ross என்ற பெண்ணுக்கு தற்போது 67 வயதாகிறது.

    இவரது தந்தையான ஜான் தாமஸ் என்பவர், கடந்த 1979 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

    இதனையடுத்து, கவுண்டி டர்ஹாம் பகுதியை அடுத்த பிஷப் ஆக்லாந்து அருகே அமைந்துள்ள விட்டன் பார்க் கல்லறையில் ஜான் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து, கடந்த 43 ஆண்டுகளாக சில்வியா ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவரும் ஜான் தாம்ஸ் கல்லறைக்கு தவறாமல் சென்று வருவதை வழக்கமாக கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

    அப்படி ஒரு சூழ்நிலையில் தான் அதிர வைக்கும் தகவல் ஒன்று, சில்வியாவின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    அதாவது, இத்தனை ஆண்டு காலம் தந்தையின் கல்லறை என நினைத்து சில்வியா சென்று வந்த கல்லறை அவருடையது இல்லை என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல்.

    பேஸ்புக் பதிவு ஒன்றில் வந்திருந்த பதிவு ஒன்றில் கல்லறையில் உள்ள பெயர் பலகை தவறாக வைக்கப்பட்டுள்ளது என்பது சில்வியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

    மேலும், ஜான் தாமஸ் கல்லறை, அங்கிருந்து ஒரு சில அடி தூரத்தில் இருந்துள்ளது என்பதையும் கண்டுடிபிடித்துள்ளனர்.

    இது பற்றி பேசும் சில்வியாவின் மகள், “நான் எனது தாத்தாவை சந்தித்ததே இல்லை. ஆனால், எனது தாய், 43 வருடங்களாக அவரது கல்லறை என கருதி சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த கல்லறை வேறொருவர் கல்லறை என அறிந்ததும் ஒரு கணம் உடைந்து போய் விட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நினைவு தினம், கிறிஸ்துமஸ், தந்தையர் தினம் என அனைத்து நாட்களிலும் தவறாமல் தந்தை கல்லறை என கருதி சென்று வந்த சில்வியா, மறுபக்கம் கேட்பாரற்று கிடந்த தந்தையை நினைத்து அதிக மன வேதனை அடைந்துள்ளார்.

    இனிமேல் தனது தந்தையின் கல்லறையை சரியாக அடையாளம் காணும் படி, ஒரு குறிப்பு வைக்கவும் கல்லறை கவுன்சிலிடமா சில்வியா அறிவுறுத்தி உள்ளார்.

    43 ஆண்டுகளாக தந்தை என நினைத்து அடையாளம் தெரியாத நபரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி வந்த குடும்பத்தினர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!