World News
67 வயது தந்தைக்கு, மகள்கள் செய்து வைத்த 5-வது திருமணம்..!
67 வயதான தங்களது தந்தைக்கு, மகள்கள் 5வது திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சவுகத்(67). இவருக்கு 4 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.
அதன் மூலம் அவருக்கு பத்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மேலும், இவருக்கு 40 பேரக்குழந்தைகள் மற்றும் 11 மருமகள்கள் உள்பட மொத்தம் 62 பேர் உள்ளனர்.
சௌகத்தின் 5-ஆவது திருமணத்திற்கு முன்பு, அவரின் எட்டு மகள்களுக்கும், 1 மகனுக்கும் திருமணமாகியிருந்தது.
மேலும், தான் தனியாக இருக்க கூடாது என்பதற்காக தனது இரண்டு மகள்களும் 5-ஆவது மற்றும் கடைசி முறையாக திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாக சௌகாத் கூறியுள்ளார்.
அதன்படி அவருக்கு 5-வது திருமணம் மகள்களின் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த திருமணம் குறித்து அவரது 5-வது மனைவி கூறுகையில், “எனக்கு உண்மையில் சந்தோஷமாகத் தான் உள்ளது.
மற்ற பெண்களுக்குப் போல இல்லாமல், எனக்குத் திருமணத்தின் போதே பெரிய குடும்பம் கிடைத்துள்ளது. அதில் எனக்குச் சந்தோஷம் தான்” என்றார்.
இவர்களின் திருமணம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
