Connect with us

    தாய் இறந்த நிலையில் தனியாக தவித்த தந்தைக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகள்கள்..!

    Second marriage

    Viral News

    தாய் இறந்த நிலையில் தனியாக தவித்த தந்தைக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகள்கள்..!

    தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது தாயின் அக்காவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Second marriage

    கர்நாடக மாநிலம் ஹூப்ளி அரவிந்த் நகரில் வசித்து வருபவர் டி.கே.சவான். பாஜக மூத்த தலைவரான இவர், கடந்த 2018-ம் ஆண்டில் ஹூப்ளி நகரின் மேயராக இருந்துள்ளார்.

    இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சாரதா பாய் என்ற மனைவியும் 4 மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

    மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் டி.கே.சவானின் மனைவி, சாரதா (வயது 63) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இதையடுத்து மனைவி இறந்த துயரத்தில் இருந்து மீளாத தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க மகள்கள் எண்ணியுள்ளனர்.

    இது குறித்து தங்களது தந்தையிடம் கேட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பின்னர் குடும்பத்தினர் சவானை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.

    தொடர்ந்து தங்களது தந்தைக்கு வெளியில் இருந்து பெண் பார்ப்பதை விட, தங்களுக்கு தெரிந்தவரே இரண்டாம் தாயாக வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய மகள்கள், தங்களது தாயின் அக்கா (பெரியம்மா) அனுஸ்யாவை அணுகியுள்ளனர்.

    இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவரை சம்மதிக்க வைத்தனர்.

    மேலும் குடும்பத்தினர் அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து தங்களது பெரியம்மாவை தந்தைக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்து திருமண ஏற்பாடுகளையும் செய்தனர்.

    அதன்படி கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு கோலாகலமாக சவான் – அனுஸ்யா திருமணத்தை நடத்தி முடித்தனர்.

    இதில் இவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது பெரியம்மாவை இரண்டாம் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகா மாநிலத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!