Connect with us

    “அடேங்கப்பா! 15 மனைவிகள்; 107 குழந்தைகள், எப்படித்தான் சமாளிக்காரோ”??- வியக்க வைக்கும் மனிதர்..!!

    David Sakayo Kaluhana

    World News

    “அடேங்கப்பா! 15 மனைவிகள்; 107 குழந்தைகள், எப்படித்தான் சமாளிக்காரோ”??- வியக்க வைக்கும் மனிதர்..!!

    15 மனைவிகளை திருமணம் செய்து 107 குழந்தைகளுடன் ஒருவர் (david sakayo kaluhana) சந்தோஷமாக வாழ்ந்து வரும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    David Sakayo Kaluhana

    கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana (61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.

    இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார்.

    மேலும், டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது..

    David Sakayo Kaluhana

    இதில் மட்டும் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார்.

    மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

    David Sakayo Kaluhana

    மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், இவரது வருமானம் என்பது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வெவ்வேறு பழங்குடியினரிடையே விரிவுரைகள் மூலம் அவர் சம்பாதித்த பணம் இந்த அசாதாரணமான பெரிய குடும்பத்திற்கு உணவளிக்க உதவுகிறது,

    அதே நேரத்தில் பெண்கள் வீட்டு வேலைகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.

    இவரின் மனைவிகளில் சிலரான ரோஸ், டோரின், ஜெசிகா ஆகியோர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறுகின்றனர்.

    புதிய மனைவிகள் வருவதால் எங்களிடையே எந்த பொறாமையும் இல்லை. ஏனெனில் எங்களுக்கும் அவர் நேரத்தை ஒதுக்குவதாக கூறுகின்றனர்.

    டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!