Connect with us

    ஆவின் பால் பாக்கெட்டில் செத்த ஈ; அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்..!

    Fly in Aavin milk

    Tamil News

    ஆவின் பால் பாக்கெட்டில் செத்த ஈ; அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்..!

    ஆவின் பாலில் இறந்த நிலையில் ஈ இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Fly in Aavin milk

    மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பால் பாக்கெட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    40 வழித்தடங்களில் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.

    பல்கலைநகர் அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கியுள்ளார்.

    வீட்டிற்குச் சென்றதும் அந்த பால் பாக்கெட்டில் ‘ஈ’ ஒன்று இறந்து கிடந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    உடனடியாக அந்த பெண் அந்த பாக்கெட்டை டெப்போ முகவரிடம் ஒப்படைத்தார்.

    இந்த தகவல் அறிந்து ஆவின் நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட பால் டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை திரும்ப பெற்று சென்றனர்.

    மேலும் பால் பாக்கெட்டில் ஈ வந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலினை பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    பால் பாக்கெட்டில் ஈ இருப்பது குறித்த வீடியோ வெளியான நிலையில் காலி பால் பாக்கெட் சப்ளை செய்யும் பெங்களூரை சேர்ந்த அங்கீத எனும் ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாலை பாக்கெட்டில் அடைக்கும் போது பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையின் அடிப்படையில் உதவி மேலாளர் சிங்காரவேலனை மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி பணியிடை நீக்கம் செய்தார்.

    ஆவின் பாலில் இறந்த ஈ கிடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!