Tamil News
மயானத்தில் எரியூட்டும் போது, சடலமாக கிடந்தவர் திடீரென கண் விழித்ததால், ஓட்டம் எடுத்த உறவினர்கள்..!!
இறந்ததாக நினைத்து முதியவரின் சடலத்துக்கு தீ வைக்க முயன்ற போது அவர் கண்விழித்து பார்த்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியின் திக்ரி குர்த் அருகே நரேலா கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ் பரத்வாஜ்.
62 வயதான இவர் புற்று நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவரது சுவாசம் நின்று விட்டது.
எனவே, மருத்துவமனையில் இருந்து உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களும், உறவினர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி பின்னர், மயானத்திற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர்.
அப்போது தகனம் செய்ய முயன்ற போது, முகத்தின் மீதிருந்த துணியை நீக்கி பார்த்த போது சதிஷ் கண்விழித்து பார்த்துள்ளார்.
மேலும், பலமாக மூச்சுவிடும் சத்தமும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.
பின்னர் ராஜா ஹரிச்சந்திர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
