Tamil News
கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவன்; தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு..!!
கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு தக்க சமயத்தில் முதலுதவி செய்து டிஜிபி சைலேந்திர பாபு உயிரை காப்பாற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை, மெரினா கடற்கரையில் டிஜிபி சைலேந்திர பாபு நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடல் அலையில் சிக்கினான்.
கடல் அலையில் அடித்துச் சென்ற சிறுவனை அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டு கறைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, மூச்சு பேச்சில்லாமல் அச்சிறுவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு உடனடியாக ஓடிச் சென்று அச்சிறுவனுக்கு தக்க சமயத்தில் முதலுதவி செய்தார்.
டிஜிபி முதலுதவி செய்து கொண்டிருந்தபோது, அச்சிறுவனுக்கு உடலில் உயிர் வந்தது.
உடனடியாக அச்சிறுவனை கையில் தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தக்க சமயத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த காவல் துறையினர், அரசியல் முக்கிய பிரமுகர்கள், நெட்டிசன்கள் டிஜிபி சைலேந்திர பாபுவின் இந்தச் செயலுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்
