Tamil News
ஒரே கழிவறையில் இரு கோப்பைகள்; கோவை மாநகராட்சியின் பலே திட்டம்..!
கோவை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவறையில் இருவர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கின்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை மாநகராட்சி சார்பில் கோவை அம்மன்குளம் பகுதியில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் ஒரே கழிவறையில் இரு கோப்பைகள் அமைக்கப்பட்டு இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கின்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பலத்த விமர்சனங்களை வருகின்றன.
எதற்காக இருவர் அடுத்தடுத்து அமரும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர் பயன்படுத்தும் கழிவறைகளில் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இவை குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என்றாலும் கூட கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி அதிகாரிகளும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களும் அலட்சியமாக செயல்பட்டு மாநகராட்சி நிதியை வீணாக்கி இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
