Politics
“எங்க இடத்துல நாங்க வீடு கட்றோம்; உங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்” – திமுக கவுன்சிலரை வெளுத்து வாங்கிய பெண்..!
சென்னையில் உள்ள ஒரு பகுதியில் கவுன்சிலர் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கொடுங்கையூர் கொய்யாத்தோப்பு சோலையம்மன் பகுதியை சேர்ந்தவர் தேவி.
இவர் அப்பகுதியில் செந்தமான வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவரை சந்தித்த அப்பகுதியில் 16-வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி வீடு கட்ட முறையாக அனுமதி பெற்றுள்ளீர்களா என்று விசாரித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது ஷர்மிளா காந்தியும் உடன் இருந்துள்ளார்.
அப்போது தேவி, இது தங்களின் சொந்த இடம், இங்கு வீடு கட்ட முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.
அப்போது அனுமதி பெற்ற டாக்குமென்டை கொடுங்கள் அதை சரிபார்த்துவிட்டு நாங்கள் சொன்ன பிறகுதான் கட்டுமான வேலைகளை தொடங்க வேண்டும் என்று கூறி உடனடியாக கட்டுமாண பணிகளை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து தேவி மீண்டும் கேட்டபோது, கட்டுமான பணிகளை தொடங்க கருணாநிதி லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவி அடுத்த நாள் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று கேட்டுள்ளார்.
ஆனால் அங்கு கருணாநிதி ஷர்மிளாவுடன் இருந்து சிலர் தேவியை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் கருணாநிதி எல்லை மீறி பேசியுளளார்.
இந்த பேச்சுக்களை தேவி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
கருணாநிதி தேவியிடம் பேசும்போது, ‘நான் நேத்து என்ன கேட்டேன்? உங்க இடம்தானே கட்டுங்க.. முழுசா கட்டிக்குங்க.. நான் அவ்ளோ சொன்னேன் இல்லை?’ என்று சீறுகிறார்.
அதற்கு தேவியோ, ‘எங்க இடம் நாங்க கட்டறோம்.. எங்கிருந்தோ வந்து கவுன்சிலர் ஆயிட்டு எங்களை மிரட்டறீங்க? நல்லது பண்றதுக்காகத்தானே வந்திருக்கீங்க?
மேடம், நீங்கதானே கவுன்சிலர், உங்க வீட்டுக்காரர் ஏன் பேசறார்? வீடியோ எடுக்கறேன் இப்போ பேசுங்க எல்லாரும்’ என்று தேவி கொந்தளிக்கிறார்
வீடியோ எடுக்கிறேன் என்று சொன்னதுமே, அந்த கூட்டம் அப்படியே கமுக்கமாக உட்கார்ந்து விடுகிறது.
இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்னும் மாமன்ற கூட்டம் தொடங்கப்படாத நிலையில், பெண் கவுன்சிலரின் கணவர் வீடு கட்டும் பெண்ணிடம் லட்ச கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதமே கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
