Uncategorized
சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்; எக்ஸ்ட்ராவாக அந்த பெண்ணின் மகளையும் அனுபவிக்க துடித்த டாக்டர்; அதன்பின் நடந்த விபரீதம்..!!
தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் ஒருவர் பாலியல் ( abuse) தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்திருக்கிறார்
இதன் காரணமாக அந்த மாணவி காரைக்குடியில் தனது தாய் மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக காரைக்குடியில் உள்ள வீட்டில் மாணவி கடந்த சில மாதங்களாக தங்கியிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.
இந்நிலையில், அந்த மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான பி.கே.என். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த மாணவி.
அப்போது மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் மோகன்குமாருக்கும், மாணவியின் தாயாருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் சொல்லி டாக்டர் மோகன்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மேலும் இரவு நேரங்களில் அவர்கள் வீட்டிலேயே அந்த மாணவியின் தாயாருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாயின் நடவடிக்கை குறித்து தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் மாணவி தகவல் தெரிவித்துள்ளார்
மாணவியின் தந்தையும், தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் மோகன் குமாரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த சிறுமி ஆன் லைன் மூலமாக போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் மருத்துவர் உடனான தனது தாயின் கள்ளக்காதல் குறித்து விவரித்திருந்தார்.
அதில், மாணவி தான் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும்போது தன்னை காரில் அழைத்து வருவதை வழக்கமாக்கிய டாக்டர் மோகன்குமார் அப்போது தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் மறுத்ததால் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொரானா காலத்தில் மாணவி ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற டாக்டர் மோகன் குமார், பயாலஜி பாடம் சொல்லித் தருகிறேன் என கூறி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் எனவும் மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் விசாரனை செய்து வழக்கு பதிந்து எழும்பு முறிவு டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
