Connect with us

    டாக்டரை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்த பலே பெண்; அழுது கொண்டே தாலி கட்டிய டாக்டர்..!

    Kidnapp marriage

    Viral News

    டாக்டரை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்த பலே பெண்; அழுது கொண்டே தாலி கட்டிய டாக்டர்..!

    பீஹாரில் கால்நடை டாக்டரை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Kidnapp marriage

    பீஹாரின் பெகுசராய் நகரில் வசிப்பவர் சத்யம் குமார் ஜா.

    கால்நடை மருத்துவரான இவரை நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு போனில் பேசிய சிலர், ஒரு கால்நடைக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என அழைத்தனர்.

    சத்யம் குமார் அந்த வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மூன்று பேர் அவரை மிரட்டி கடத்திச் சென்றனர்.

    மற்றொரு வீட்டில் ஒரு இளம்பெண்ணுடன், சத்யம் குமாருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் இளைஞர்களுக்கு இதுபோன்ற கட்டாய திருமணம் அடிக்கடி நடக்கும்.

    இதை, ‘பகத்வா விவாஹா’ என கூறுகின்றனர். நல்ல வேலை, வசதியுடன் இருக்கும் இளைஞர்களை கடத்திச் சென்று ஏழைக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

    இதையடுத்து, டாக்ட ரின் தந்தை அளித்த புகாரின்படி, போலீசார் மணமகள் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக அவரது தந்தை அளித்துள்ள புகாரில், ‘எனது மகனை காணவில்லை என நாள் முழுவதும் தேடிப் பார்த்து தவித்து வந்தேன்.

    அடுத்த நாள் காலை எனது செல்போனுக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது.

    அதில் எனது மகன் மணக்கோலத்தில் உட்கார வைக்கப்பட்டு ஒரு பெண்ணுடன் திருமணச் சடங்கு நடத்தப்பட்டது.

    இதை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்

    சில ஆண்டுகளுக்கு முன்னர் வினோத் குமார் என்ற 29 வயது இன்ஜினியரை ஒரு கும்பல் கடத்தி அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி பெண் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெகுசராய் மாவட்ட எஸ்.பி., யோகேந்திர குமார் கூறியுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!