Tamil News
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்; கோபத்தில் இருக்கையை எட்டி உதைத்த டாக்டர்; நோயாளிகள் அதிர்ச்சி..!
திருப்புவனம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, டாக்டர் பாலகிருஷ்ணன் இருக்கையை எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர்- கர்ப்பிணி பெண்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ரயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் கர்ப்பிணி சவுந்தர்யா, வயது 24.
இவரது காலில் அடிபட்டதால் இரவு 10:00 மணிக்கு சிகிச்சை பெற, திருப்புவனம் அரசு மருத்துவமனை சென்றார்.
அங்கு பணியில் இருந்த டாக்டர் பாலகிருஷ்ணன், சவுந்தர்யாவிடம் அவசர பிரிவு நோயாளி படுக்கையில் ஏறி படுக்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரச நோயாளி பிரிவுக்கு சென்ற சவுந்தர்யாவுக்கு அங்கிருந்த படுக்கை உயரமாக இருந்துள்ளது.
இதனால் அருகில் இருந்த மர இருக்கையில் அமர முயன்றார்.
இதனைக் கண்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருக்கையை எட்டி உதைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சவுந்தர்யாவின் பெற்றோரையும் அவதூறாக பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டாக்டர் மீது துறை ரீதியான விசாரணை துவங்கி உள்ளது.
இம்மருத்துவமனைக்கு தினமும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வரும் நிலையில், டாக்டர்கள் அவதுாறாக பேசுவதும், உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதும், இரவில் பணியில் இல்லாததும் தொடர் கதையாக உள்ளது.
உயர் அதிகாரிகள் திருப்புவனம் அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
