Viral News
கடும் டிராபிக் ஜாம்; காரிலிருந்து இறங்கி 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனைக்கு சென்று வெற்றிகரமாக ஆபரேசன் செய்து நோயாளியின் உயிரை காத்த டாக்டர்..!
முக்கியமான ஆபரேசனுக்கு செல்லவிருந்த நிலையில் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டதால், நோயாளியின் உயிரை காக்க காரிலிருந்து இறங்கி 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை சென்றடைந்து வெற்றிகரமாக ஆபரேசனை முடித்து நோயாளியின் உயிரை காத்த டாக்டருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெங்களூரூ என்றாலே கடும் டிராபிக் ஜாம் தான் பலருக்கு நினைவுக்கு வரும்.
வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து ஊர்ந்து செல்லும் நிலை கொண்ட மாநகரமாக பெங்களூரு திகழ்கிறது.
இந்நிலையில் மணிப்பால் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ஒரு நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி மூலம் கால்பிளாடர் ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது.
இதற்காக டாக்டர் கோவிந்த் நந்தகுமார் காலை யில் தனது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் சார்ஜாபூர் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேரம் ஆக ஆக டிராபிக் குறைவதாக இல்லை. அதே நேரத்தில் ஆபரேசனுக்கு குறித்த நேரமும் நெருங்கி கொண்டிருந்தது.
மருத்துவமனை நிர்வாகமும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட்டு மருத்துவர் நந்தகுமார் வருகைக்காக தயாராகஇருந்தனர்.
அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும், 3 கிலோமீட்டர் ஆகும் என கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டது.
அங்கு நிலவிய சூழலையும், நோயாளியின் உடல்நிலையையும் உணர்ந்த, மருத்துவர் நந்தகுமார் தனது காரில் இருந்து இறங்கி, அங்கிருந்து மருத்துவமனைக்கு ஓடத் தொடங்கினார்.
45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை அடைந்த நந்தகுமார், அறுவை சிகிச்சை அறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.
உடனடியாக தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்தார் நந்தகுமாரால்.
தற்போது குணமடைந்துள்ளார்.
இது குறித்து பேசிய டாக்டர் நந்தகுமார்;
அறுவை சிசிக்சை செல்வதற்காக முன்கூட்டியே வீட்டிலிருந்து காரில் புறப்பட்டும் சர்ஜாபூர் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது.
நீண்டநேரமாகியும் நெரிசல் சரியாகவில்லை. அங்கிருந்து மருத்துவமனைக்கு 45 நிமிடங்கள் ஆகும் என கூகுள் மேப்பில் பார்த்தேன்.
என்னுடைய குழுவினர் அறுவை சிகிச்சைக்காக தயாராக இருந்தார்கள். போக்குவரத்து நெரிசல் சரியாக மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்குச்செல்ல முடியாது என்பதால், காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு ஓடினேன்.
சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது, நோயாளியும் குணமடைந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இவரின் மனிதாபிமானத்தை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
