Viral News
பிரசவத்தின் போது மறந்து போய் பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்; அதன்பின் நடந்த விபரீதம்…!
பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த டாக்டர்களின் செயல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 25 வயது கொண்ட பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவம் முடிந்த ஒரு சில மாதங்களில் அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அப்பெண் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, பெண்ணின் வயிற்றை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பெண்ணின் வயிற்றில் துணி இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் உடனடியாக அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர்.
தற்போது, அப்பெண்ணின் வயிற்றிலிருந்து துணியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இது குறித்து அப்பெண் கூறுகையில், பிரசவம் பார்த்த மருத்துவர்கள் சிகிச்சையின்போது தவறுதலாக வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக கூறியுள்ளார்
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
