Uncategorized
சரக்கடித்து விட்டு டம்ளரை சக நண்பரின் அந்தரங்க பின் பகுதிக்குள் சொருகிய நண்பர்கள்; ஸ்கேன் எடுத்த போது டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
நண்பரின் ஆசனவாயில் டம்ப்ளரை திணித்த மது போதையில் இருந்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா சந்திரா ராவத் (வயது 45).
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து தண்ணியடித்துள்ளார்.
அப்போது போ.தை.யில் கலாட்டா செய்வதாக கூறி கிருஷ்ணாவை இழுத்து பிடித்த நண்பர்கள், அவரது ஆசன வாயில் ஒரு டம்ளரை திணித்துள்ளனர்.
அப்போது போதையில் இருந்ததால் அவருக்கு எதுவும் சரியாக தெரியவில்லை.
பின்னர் மறுநாள் காலை எழுந்ததும் அவருக்கு அந்த பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இதை வெளியே சொன்னால் அவமானமாகிவிடும் என்று எண்ணிய அவர், இதை அப்படியே விட்டுவிட்டார்.
மேலும் இதைப்பற்றி வீட்டாரிடமும் தெரிவிக்கவில்லை, மருத்துவரையும் அணுகவில்லை.
இப்படி நாளாக நாளாக அவருக்கு அந்த பகுதி மட்டுமின்றி, வயிற்றிலும் வலி அதிகமாக காணப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது குடும்பத்தாரிடம் தனக்கு வலி இருப்பதாக அவர் தெரிவிக்க அவர்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவர்களிடம், தனது மலக்குடலில் சில்வர் டம்ளர் இருப்பதை ராவத் மறைத்திருக்கிறார்.
இதனையடுத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில், மேற்கொள்ளப்பட்ட எக்ஸ் கதிர் பரிசோதனையில் தான் அசௌகரியத்திற்கான முழுமையான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
சுமார் 15 செ.மீ., நீளமுள்ள ஒரு சில்வர் டம்ளர் மலக்குடலில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது 8 செ.மீ., விட்டமும், 15 செ.மீ., நீளமும் கொண்ட சில்வர் டம்ளர் அகற்றப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “விளையாட்டாக எண்ணி அவரது ஆசன வாயில் போதையில் இருந்த அவரது நண்பர்கள் டம்ளரை வலுக்கட்டாயமாக திணித்துள்ளனர்.
இதனால் அவருக்கு சரிவர வயிற்றுப்போக்கு நேரவில்லை.
இதனால் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டு பின்னர் இங்கு வந்தார். நாங்கள் அவரது ஆசனவாயில் இருந்த டம்ளர் அகற்றினோம்.
தற்போது அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்றனர்.
போ.தையில் நண்பர்களே சக நண்பனின் அந்தரங்க பகுதிக்குள் 8 செ.மீ., அளவிலான டம்ளரை வலுக்கட்டயமாக திணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
