Viral News
“பிச்சையெடுக்க விருப்பமில்லை” – பிச்சை போட்ட தொழிலதிபர் ஒருவரிடம் நெத்.திய.டியாக பாட்டி சொன்ன பதில்…!!
இந்தியாவின் புனே நகரில் வசிக்கும் பாட்டியின் வாழ்க்கை பல இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்துள்ளது.
தி ரியூப்’ இந்தியாவின் முக்கிய ஆடை நிறுவனங்களில் ஒன்று ஆகும்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷிகா ரதி என்பவர்தான் பேனா விற்று சம்பாதிக்கும் ஏழை பாட்டியை உலகறிய செய்துள்ளார்.
சமீபத்தில் அவர் தனது நண்பருடன் காரில் வெளியே சென்ற போது அங்கு ரோட்டில் வயதான பெண்மணி ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்த ரதி, அந்த பாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே அந்த பாட்டியினை அழைத்து பணம் எடுத்து தர முயன்றார்.
ஆனால் அதனை வாங்க மறுத்த அந்த பாட்டி, எனக்கு பணம் வேண்டாம். நான் பிச்சை எடுக்கவில்லை என்று கூறிவிட்டு தான் வைத்திருந்த பேனா பெட்டியை காட்டினார்.
ஒரு பேனாவின் விலை ரூ 10. இதனை வாங்கி கொள்ளுங்கள் என்று அன்போடு கூறினார் அந்த பாட்டி.
அதனை தான் விற்கும் பேனாவின் அட்டை பெட்டியிலும் எழுதி உள்ளார்.
பிறகு ரதி , அந்த பாட்டியிடம் இருந்து பேனாக்கள் வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.
தள்ளாத வயதிலும், தன்னுடைய சுயமரியாதையை விட்டு கொடுக்காமல், உழைத்து வாழ வேண்டும் என்ற அவரது எண்ணத்தால் நெகிழ்ந்து விட்டோம் என ரதி குறிப்பிட்டுள்ளார்.
