Tamil News
“திருமணமாகி 3 வருடம் ஆகியும் குழந்தை இல்லையே” – விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!
திண்டுக்கல் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் லாரி டிரைவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 24).
இவருக்கும் முத்துப்பாண்டியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சந்தோஷமாக வாழ்க்கையை துவக்கிய இத்தம்பதிக்கு குழந் தை பாக்கியம் கிட்டவில்லை.
திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையே என ஏக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மன உளைச்சல் அதிகமாக ஆன நிலையில் மணிவேல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து எரியோடு போலீசில் முத்துப்பாண்டியம்மாள் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் டிரைவர் மணிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
