Viral News
இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி..ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பஸ் டிரைவரின் மகள்..!!
இந்தியாவில் உள்ள படிப்புகளில் மிக முக்கியமானது ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான சிவில் தேர்வு ஆகும்.
அனைத்து தேர்வுகளின் தாய் எனப்படும் இந்த தேர்வை சாதாரண நிலையில் உள்ளவர்களே சாதிக்க திணறும் காலக்கட்டத்தில் ஒரு பஸ் டிரைவரின் மகள் சாதித்துள்ளது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
டெல்லி மாநில அரசின் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரீத்தி ஹூடாவின் தந்தை.
ப்ரீத்தி தனது குழந்தைப் பருவத்திலிருந்தே படிப்பில் படு சுட்டி. 10 ஆம் வகுப்பு தேர்வில் 77% மதிப்பெண்ணும், 12 ஆம் வகுப்பு தேர்வில் 87% மதிப்பெண்ணும் பெற்றார்.
ஒருகட்டத்தில் குடும்பத்தின் மோ.சமான நிதிநிலை காரணமாக படிப்பை நிறுத்தி பிரீத்திக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தது அவரின் குடும்பம்.
ஆனால் குடும்பத்தின் எ.திர்ப்பை மீறி படிப்பை தொடர்ந்த பிரீத்தி, டெல்லியில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் இந்தி பாடத்தில் பட்டம்பெற்றார். புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இந்தியில் பிஎச்.டி பட்டம் பெற்றவர்,
இந்தியை தனது விருப்பப் பாடமாக கொண்டு யுபிஎஸ்சி தேர்வில் பங்குபெற்றார். கடந்த சில வருடமாக தேர்வுக்கு தயாராகி வரும் ப்ரீத்தி, தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இருப்பினும், தனது முயற்சியை ப்ரீத்தி கைவிடவில்லை. இரண்டாவது முறையாக தேர்வில் கலந்துகொண்டார். இந்தமுறை, அவர் அகில இந்திய தரவரிசையில் 288வது இடம் பிடித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார்
