Viral News
குடித்து விட்டு திருமணத்திற்கு வந்த மணமகன்; மாலையை மணமகள் கழுத்தில் போடாமல், மணமகள் தங்கையின் கழுத்தில் போட்ட பரிதாபம்..!
திருமணத்தில் குடி போதையில் வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் தர்ம அடி வாங்கியுள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில்
மணமகன் குடித்து விட்டு மணமேடைக்கு வந்துள்ளார்.
இதனால் மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு, கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறுகின்றார்.
ஆனால் மாப்பிள்ளை தள்ளாடியபடி நின்றுள்ளார்.
மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில் போட்ட பின்பு, மாப்பிள்ளையோ மணப்பெண்ணின் தங்கையின் கழுத்தில் போட்டுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாரியாக கன்னத்தில் அடித்துள்ளனர்.
மணமகள் வேண்டாம் என்று தடுத்தும் நிறுத்தாமல் அவரது தங்கை மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
बिहार में शराबबंदी बा … 🤔😅🤣😂🥃 pic.twitter.com/MiWYfF2N2T
— Vikki1975 (@Vikki19751) June 21, 2022
