Viral News
குடிபோதையில் சாலையில் படுத்து கிடந்த தெருநாயை கட்டி அணைத்து உறங்கிய இளைஞர்…!!
குடிபோதையில் சாலையில் படுத்து கிடந்த தெருநாயை கட்டி அணைத்து இளைஞர் உறங்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் உள்ள பேருந்து நிலையம் பெரிய பேருந்து நிலையமாக திகழ்கிறது.
இங்கிருந்து தமிழகத்தின் முக்கிய பிற நகரங்களுக்கு செல்லும் பேருந்து சேவைகளும் இங்கு தான் அதிகமாக உள்ளது.
அதனால் இந்த பேருந்து நிலையம் எப்பொழுதும் மிகுந்த பரபரப்பாகவே காணப்படும்.
மேலும் மாநகரப் பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளும் இங்கிருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வர்.
இந்தப் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.
பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால்
இதில் ஏராளமான குடிமகன்கள் தினமும் இங்கு வந்து குடித்து விட்டு போதையில் தள்ளாடும் காட்சியும் அரங்கேறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று குடிமகன் ஒருவர் குடித்து விட்டு தள்ளாடியபடி அங்கு தெருவில் படுத்திருந்த தெரு நாயை தனது துணையாக நினைத்து கட்டி பிடித்து சாலையில் படுத்து உருண்டு மட்டையாகி உள்ளார்.
மேலும் அவ்வழியாக செல்லும் நபர்களை தகாத வார்த்தைகளால் வசைபாடி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் அந்த குடிமகன் மேலே ஏறி மிதித்து தள்ளியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
