Connect with us

    வாய் பேச முடியாத (dump) இரு மாற்றுத்திறனாளிகள் காதலித்து திருமணம்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

    Dump man and woman

    Viral News

    வாய் பேச முடியாத (dump) இரு மாற்றுத்திறனாளிகள் காதலித்து திருமணம்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

    பொதுவாகவே, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள், ஆனால் இங்கே வாய் பேச முடியாத ஒரு காதல் ஜோடி காதல் வயப்பட்டு திருமணம் செய்திருக்கிறார்கள்.

    Dump man and woman

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜகிதியா மாவட்டம் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்தவர் அத்ரம் லதா என்கிற ஜோதி.

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண்.

    இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர்.

    நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

    வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது.

    இதனை அடுத்து அத்ரம் லதா-அருண் திருமணத்தை நடத்த ஜாகிடியவைச் சேர்ந்த முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகிய சமூக சேவகர்கள் முன்வந்தனர்.

    திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கினர்.

    இதுகுறித்து தெரிவித்த சமூக சேவைக்குழு, ‘கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறோம்.

    ஒருவரையொருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

    வாய் பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகள் காதலித்து திருமணம் செய்ததை அப்பகுதியிலுள்ள மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!