Connect with us

    எச்சரிக்கை! இந்த மீனை மட்டும் சாப்பிட்ராதீங்க; ஆண்மைக்குறைவு, புற்று நோய் ஏற்படும்; நம் சந்ததியே அழிந்து விடும்..!

    Lifestyle

    எச்சரிக்கை! இந்த மீனை மட்டும் சாப்பிட்ராதீங்க; ஆண்மைக்குறைவு, புற்று நோய் ஏற்படும்; நம் சந்ததியே அழிந்து விடும்..!

    Scorpion fish

    மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது.

    இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள் கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவை தான்.

    ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக் கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்.

    ஆனால் மிகவும் ஆபத்து நிறைந்த ஒரு மீன் வகை உள்ளது.

    இந்த மீன் பூ விரால், மொய்மீன், தேளி விரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த மீனை சாப்பிட்டால், ஆண்மை குறைபாடு மற்றும் புற்றுநோய் ஏற்படும்.

    அப்படிப்பட்ட தேளிவிரால் எனும் இந்த மீன் இன்றும் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது.

    இந்த மீனை மொய்மீன், பூ விரால் எனவும் சில ஊர்களில் கூறுவார்கள்.

    உண்மையில் இந்த மீன் ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் வகையை சேர்ந்தது எனக்கூறப்படுகிறது.

    ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்தாகவும் கூறப்படுகின்றன.

    ஆனால், இந்தியாவில் பெரிய அளவில் இல்லாமல் இருந்த இந்த மீன் வகையை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் வளர்க்க அனுமதி பெற்று நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மீன் பண்ணைகள் அமைத்துக்கொடுத்து விற்பனை செய்து வந்தது.

    இதனை தொடர்ந்து இந்த மீன் வளர்ப்பை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

    இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த மீன் வகை இன்றும் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுதான் வருகிறது.

    குறிப்பாக கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும், கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுகிறது.

    இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை, உளுவை, ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள்.

    இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அசைவம் மட்டுமே உண்டு வாழும் இந்த மீனுக்கு கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

    இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!