Connect with us

    அண்ணிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த தம்பியின் ஆணுறுப்பை அறுத்து எறிந்த அண்ணன்…!

    Woman abuse

    Viral News

    அண்ணிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த தம்பியின் ஆணுறுப்பை அறுத்து எறிந்த அண்ணன்…!

    நாடு முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் கொலை, கொள்ளை போன்ற செய்திகள் நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.

    பெரும்பாலும் கொலை அல்லது தற்கொலை பின்னணியை ஆராயும்போது அவை அனைத்தும் கள்ளக்காதல் கொலையாக இருந்து வருவதுதான் நிதர்சனமாக உள்ளது.

    இந்த வரிசையில் அம்மாவாக நினைக்க வேண்டிய அண்ணிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கொழுந்தனை, உடன் பிறந்த அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Woman abuse

    ஆந்திர மாநிலம் நார்பலா மண்டலம் நானபள்ளியில் வசித்து வருபவர்கள் வீரநாரப்பா கவுட், மற்றும் நாராயணசாமி ஆகியோர்

    இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

    அண்ணன் வீரநாரப்பா மனைவி பத்மாவதி. இவருக்கும் மைத்துனன் நாராயணசாமிக்கும்   இடையே பல மாதங்களாக திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்தது.

    ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த விஷயம் தனது கணவருக்கு தெரிந்து விடும் என அஞ்சிய பத்மாவதி நாராயணசாமியை புறக்கணிக்க தொடங்கினார்.

    ஆனால் நாராயணசாமி அண்ணியுடனான உறவை கைவிட மறுத்து அடிக்கடி அண்ணி பத்மாவதிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் நாராயணசாமியின் தொல்லை தாங்க முடியாமல் பத்மாவதி தவித்து வந்துள்ளார்.

    இது குறித்து தனது கணவரிடம், உங்கள் தம்பி நாராயணசாமி தன்னை துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

    இதனால் கடும் ஆத்திரமடைந்த வீரநாரப்பா தம்பி நாராயணசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    திட்டமிட்டபடி கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நாராயணசாமியை அவரது பண்ணையிலுள்ள தோப்புக்கு வரவழைத்தார்.

    அப்போது நாராயணசாமியுடன் பத்மாவதி ஆசையாக பேசினார்.

    அப்போது அவருடன் மீண்டும் அவர் பாலியல் உறவுக்கு முயற்சித்தார்.

    இதனை மறைந்திருந்து பார்த்த வீரநாரப்பா தம்பி நாராயணசாமியை பின்னால் இருந்து கடுமையாக தாக்கினார்.

    அப்போது கீழே சரிந்து விழுந்தார் நாராயணசாமி.

    உடனே, நாராயணசாமியின் கால்களை பத்மாவதி பிடித்துக்கொண்டார். அப்போது நாராயணசாமியின் ஆணுறுப்பை பலமாக எட்டி உதைத்தார் நாரப்பா.

    பின்னர் அங்கிருந்த  பீர் பாட்டிலால் நாராயணசாமியின் ஆணுறுப்பை வெட்டினார் நாரப்பா.

    பின்னர் நாராயணசாமியின் கழுத்தில் இருந்த தாயத்து கயிற்றால் அவரின் கழுத்தை இறுக்கி கொன்றனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை வீர நாரப்பாவை சந்தேகத்தின் பெயரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தன் மனைவியுடன் இணைந்து தான் தன் தம்பியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து வீர நாரப்பா மற்றும் அவனது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!